நான் இறக்க வேண்டுமானால்

Translated to Tamil by

நான் இறக்க வேண்டுமானால்

நீ இருக்கவேண்டும்

என் கதை கூற

என் உடைமை விற்று

துணி இழை நுகர்ந்து

பட்டம் ஒன்று செய்ய

நெடுவால் வெள்ளைப் பட்டம்


காசாவில் எங்கோர் குழந்தை

விடை கொடுக்காமல் சென்ற

அப்பாவின் திசையில்

நீ செய்த என் பட்டம்

மேலே பறக்க

ஒரு நொடியேனும்

அது தேவதை என்றெண்ணும்


என் மறைவு

நம்பிக்கை உண்டாக்கட்டும்

ஓர் கதை யாகட்டும்


A poem by Refaat Alareer.